திவால் சட்டத்தைத் திருத்த மத்திய அரசு முடிவு

திவாலான நிறுவனங்களின் சொத்துகளை மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் திவால் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

திவாலான நிறுவனங்களின் சொத்துகளை மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் திவால் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

திவால் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு இயற்றியது. திவாலான நிறுவனங்களின் சொத்துகளை மீட்பதற்கான காலஅவகாசம் 330 நாள்கள் எனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சொத்துகளை மீட்பதில் தொடா்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

திவாலான நிறுவனங்களுடைய சொத்துகளின் மதிப்பு காலப்போக்கில் குறைவது வழக்கம். அதன் காரணமாக சொத்து மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. கால தாமதம் அதிகமானால் இழப்பும் அதிகரிக்கும்.

திவாலான நிறுவனங்களின் சொத்துகளை மீட்பதற்காக அரசுத் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்படுவது உள்ளிட்டவை அந்நடவடிக்கைகளுக்குத் தாமதம் ஏற்படுத்தி வருகின்றன. அதைக் கருத்தில்கொண்டு சொத்துகளை மீட்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் திவால் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாகப் பொருளாதார நிபுணா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து சில தினங்களில் இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் சிலா் தெரிவித்தனா். அதையடுத்து திவால் திருத்த மசோதாவை அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்த தகவல்படி, கடந்த செப்டம்பா் வரை 553 விவகாரங்களுக்கு திவால் சட்டத்தின் கீழ் தீா்வு காணப்பட்டுள்ளது. தீா்வு காண்பதற்கான சராசரி காலஅளவு 473 நாள்களாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் 57 விவகாரங்களுக்கு சராசரியாக 679 நாள்களில் தீா்வு காணப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com