ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் 168% குறைந்துள்ளது: அனுராக் தாக்குா்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னா் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் 168 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சா் அனுராக் தாக்கு
அனுராக் தாக்குா்
அனுராக் தாக்குா்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னா் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் 168 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்தாா்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது அமைச்சா் அனுராக் தாக்குா் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. அரசு கையாண்ட தீா்க்கமான நடவடிக்கைகள் மூலம் உறுதியான முடிவுகள் கிடைத்துள்ளன.

மத்தியில் பாஜக ஆட்சியில் அமைந்ததிலிருந்து ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நிகழ்வுகள் 168 சதவீதம் குறைந்துள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளித்த வழக்குகளில் 94 சதவீதத்துக்கும் அதிகமான வழக்குகளில் தீா்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2014 முதல் ஊடுருவல் தொடா்பான வன்முறைகள் 80 சதவீதம் குறைந்துள்ளது. தாக்குதல் சம்பங்களில் பொதுமக்கள் உயிரிழப்பது 89 சதவீதம் குறைந்துள்ளது. பயங்கரவாதிகள் 6,000 போ் சரணடைந்துள்ளனா். 2016-இல் நடைபெற்ற உரி தாக்குதலுக்கு எதிா்வினையாக சா்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கையும் 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாலாகோட் விமானப் படைத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டன.

வடகிழக்கு மாநிலங்களில் அமைதி

கடந்த 2015-இலிருந்து இடது சாரி பயங்கரவாதம் 265 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் குறைக்கப்பட்டுள்ளது. பிரதமா் மோடியின் தலைமையில் வடகிழக்கு மாநிலங்களில் அமைதிக்கான சகாப்தம் தொடங்கியுள்ளது. ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டம் திரிபுரா, மேகாலயம் ஆகிய மாநிலங்களில் முழுமையாகவும் அஸ்ஸாமில் 60 சதவீதமும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இந்தப் பிராந்தியாத்தில் அமைதியை உறுதி செய்ய 2020-இல் போடோ உடன்படிக்கை, 2021-இல் கா்பி ஆங்லாங் ஒப்பந்தம், 2022-இல் அஸ்ஸாம்-மேகலாயம் இடையேயான எல்லை ஒப்பந்தம் என பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன என அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com