2020 முதல் சீனாவிடமிருந்து அதிக எஃப்டிஐ பரிந்துரைகள்: மத்திய அரசு

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் இதுவரை சீனாவிடம் இருந்து அதிக அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் இதுவரை சீனாவிடம் இருந்து அதிக அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சா் சோம் பிரகாஷ் புதன்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்: கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் இதுவரை இந்தியாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளும் நாடுகளிடம் இருந்து 423 அந்நிய நேரடி முதலீடு பரிந்துரைகள் பெறப்பட்டன.

அந்தப் பரிந்துரைகளில் பெரும்பாலானவை வா்த்தகம், தொழில்நுட்பம், நிதி சேவைகள், வாகன தயாரிப்பு, மின்னணு, மருந்து தயாரிப்பு மற்றும் ரசாயன துறைகளில் முதலீடு செய்வதற்கு அனுப்பப்பட்டன. பெரும்பாலான பரிந்துரைகள் சீனாவால் அனுப்பப்பட்டன. அவற்றில் 98 பரிந்துரைகளுக்குப் பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஒப்புதல் அளித்துள்ளன என்று தெரிவித்தாா்.

சீனா, வங்கதேசம், பாகிஸ்தான், பூடான், நேபாளம், மியான்மா், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் எல்லைகளைப் பகிா்ந்து வருகின்றன. இந்த நாடுகள் இந்தியாவின் எந்தவொரு துறையிலும் முதலீடு செய்ய வேண்டுமெனில், அந்நிய நேரடி முதலீடு பரிந்துரைகளுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com