பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களின் அனைத்து டிக்கெட்டுகளும் 7 நிமிடங்களில் விற்று தீர்ந்தன!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகளின் வசதிக்காக, தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி சிறப்பு ரயில் உள்பட 5 சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டடுள்ளன. 
பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களின் அனைத்து டிக்கெட்டுகளும் 7 நிமிடங்களில் விற்று தீர்ந்தன!

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களில் சிறப்பு ரயில்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.

சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். முன்பதிவு நாளிலேயே வழக்கமான ரயில்களின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதால், சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான அறிவிப்புக்காக மக்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகளின் வசதிக்காக, தாம்பரம்-நெல்லை, தாம்பரம்-நாகர்கோவில், கொச்சுவேலி-தாம்பரம், எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் இடையே மொத்தம் 10 சிறப்பு ரயில்களும், மறு மார்க்கத்தில் 5 சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை(டிச.29) காலை 8 மணிக்கு தொடங்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களின் முன்பதிவு செய்வதற்காக சென்னை சென்டரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் வியாழக்கிழமை காலை முதலே ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், 5 சதவீதம் பேர் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடிந்தது, பெரும்பாலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டதால், முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களில் சிறப்பு ரயில்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதனால் டிக்கெட் எடுக்க கவுன்டரில் காத்திருந்த 95 சதவீதம் பேர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய கவுன்டரில் காத்திருந்த மணிகண்டன் கூறுகையில், "நான் தூத்துக்குடியைச் சேர்ந்தவன், சென்னையில் வேலை செய்கிறேன். காலை 6.40 மணிக்கு ரயில் நிலையம் வந்து சிறப்பு ரயிலுக்கு டிக்கெட் பதிவு செய்ய கவுன்டரில் காத்திருந்தேன். ஆனால், கவுன்டர் திறந்த 7 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. காலையிலிருந்து காத்திருந்தும் டிக்கெட் கிடைக்காதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறினார்.

சிறப்பு ரயில்கள் விவரம்: 
பொங்கல் பண்டிகையையொட்டி, தாமபரத்தில் இருந்து ஜனவரி 12 ஆம் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு கட்டண ரயில்(06021) பிறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை அடையும். மறுமார்க்கமாக, திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 1 ணிக்கு சிறப்பு ரயில்(06022) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். 

தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில்(06041) புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். 

நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 16 ஆம் தேதி மாலை 5.10 மணிக்கு சிறப்பு ரயில்(06042) புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். 

இவைத்தவிர, கொச்சுவேலி-தாம்பரம்(06044,06043), எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல்(06046, 06045) தாம்பரம்-திருநெல்வேலி(06057, 06058) ஆகிய 3 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com