தாணேயில் 1000 ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பறிமுதல்: 3 பேர் கைது

மகாராஷ்டிரம் மாநிலம் தாணேயின் பிவாண்டியில் 1000 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 1000 டெட்டனேட்டர்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை மகாராஷ்டிர போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தாணே: மகாராஷ்டிரம் மாநிலம் தாணேயின் பிவாண்டியில் 1000 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 1000 டெட்டனேட்டர்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை மகாராஷ்டிர போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இதுதொடா்பாக மகாராஷ்டிர காவல்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம் மாநிலம் தாணே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியில் ஒருவருக்கு வழங்குவதற்காக, பால்கர் குடியிருப்பைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும், சட்டவிரோதமாக ஒரு காரில் 1000 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 1000 டெட்டனேட்டர்களுடன் பிவாண்டியை அடைந்தனர். 

அப்போது வெடிபொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களில் அல்பேஷ் என்கிற பல்யா ஹிராஜி படேல் (34), பங்கஜ் சவுகான் (23) மற்றும் சமீர் என்கிற சம்யா ராமச்சந்திர வேத்கா (27) என்பது தெரிவந்துள்ளது. அவர்களிடம் காவல்துறையினா் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்’ என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com