பட்ஜெட் 2022 நவீன இந்தியாவை உருவாக்கும்: பிரதமர் மோடி

2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நவீன இந்தியாவை உருவாக்கும் முயற்சியாக இருக்கும் என்று பாரதிய ஜனதா தொண்டர்களுடனான உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
நரேந்திர மோடி (கோப்புப் படம்)
நரேந்திர மோடி (கோப்புப் படம்)

2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நவீன இந்தியாவை உருவாக்கும் முயற்சியாக இருக்கும் என்று பாரதிய ஜனதா தொண்டர்களுடனான உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் உள்ள பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.

2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பட்ஜெட்டில் உள்ள சாத்தியங்கள், வாய்ப்புகள், நலன்கள் குறித்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். 
 
அதில் பேசிய அவர் பேசியதாவது, ’’7 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது ரூ. 2.30 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சுயசார்பு இந்தியா மற்றும் நவீன இந்தியாவை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமானது என்று கூறினார்.

நவீன இந்தியாவை உருவாக்குவதற்காக கூறுகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்துள்ளது.

எல்லைப்பகுதிகளில் நடைபெறும் இடம்பெயர்வுகள் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது. இதனால், எல்லைப் பகுதிகளிலுள்ள கிராமங்களை மேம்படுத்தும் வகையிலான அம்சங்கள் பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ளன. 

தேசிய மாணவர் படைகளுக்கான பயிற்சியை எல்லைப் பகுதிகளிலுள்ள கிராமங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்லைப் பகுதிகளிலுள்ள இளைஞர்கள் அதிக அளவு ராணுவத்தில் இணைய வாய்ப்பு ஏற்படும்.

இந்தியாவின் பாதுகாப்பான எல்லைகளாக கிராமங்களை வளர்க்க நினைக்கிறோம். 2014 ஆம் ஆண்டு நாட்டில் 90,000 கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் இருந்தன. ஆனால் பாஜக ஆட்சி செய்த 7 ஆண்டுகளில் 50,000 கிலோமீட்டர் தூரம் கூடுதலாக நெடுஞ்சாலைகள் விரிவக்கம் செய்யப்பட்டுள்ளன. விரைவில் ஆயிரம் கிலோமீட்டருக்கு நெடுஞ்சாலைகள் போடப்படும்'' என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com