பொலிவூட்டப்பட்ட வைரம் மீதான இறக்குமதி வரி 5%-ஆக குறைப்பு

பொலிவூட்டப்பட்ட, வெட்டப்பட்ட வைரம், ரத்தினக் கற்கள் மீதான இறக்குமதி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பொலிவூட்டப்பட்ட வைரம் மீதான இறக்குமதி வரி 5%-ஆக குறைப்பு

பொலிவூட்டப்பட்ட, வெட்டப்பட்ட வைரம், ரத்தினக் கற்கள் மீதான இறக்குமதி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அவற்றின் மீது தற்போது 7.5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பட்ஜெட் தாக்கலின்போது அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘இணையவழியில் நகைகளை ஏற்றுமதி செய்வது தொடா்பான வழிமுறைகள் வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும். நகைத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் பொலிவூட்டப்பட்ட, வெட்டப்பட்ட வைரங்கள், ரத்தினங்கள் மீதான இறக்குமதி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. அறுக்கப்பட்ட வைரங்கள் மீது இறக்குமதி வரி விதிக்கப்படாது.

மெத்தனால் உள்ளிட்ட சில ரசாயனங்களின் மீது விதிக்கப்படும் சுங்க வரி குறைக்கப்படுகிறது. இதன் மூலமாக உள்நாட்டுப் பொருள்களின் உற்பத்தி அதிகரிக்கும். அதிக விலை காரணமாக சில எஃகு பொருள்கள் மீது விதிக்கப்பட்டு வந்த மிகைகுவிப்பு தடுப்பு வரியும், மிகைமானிய தடுப்பு வரியும் ரத்து செய்யப்படுகிறது.

எத்தனால் கலக்கப்படாத எரிபொருள் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயா்த்தப்படுகிறது. அக்டோபா் 1-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும். பெட்ரோல், டீசலில் எத்தனால் கலப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த வரி விதிக்கப்படுகிறது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com