சிறார்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி: மாநில அரசுகளுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம்

சிறார்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் மாநில செயலாளர்களுக்கு புதன்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.
மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் (கோப்புப்படம்)
மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் (கோப்புப்படம்)

சிறார்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் மாநில செயலாளர்களுக்கு புதன்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து ராஜேஷ் பூஷண் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

உலகளவில் அதிகபட்சமாக இந்தியா முழுவதும் 15 வயதுக்கு மேற்பட்ட 166.68 கோடிக்கு மேல் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில், 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் 4.66 கோடி சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 63 சதவீத சிறார்களுக்கு ஒரே மாதத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சிறார்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி போடுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் முதல் தவணை செலுத்திய 28 நாள்களில் இரண்டாம் தவணை செலுத்த தகுதியானவர்கள் ஆவர். ஜனவரி 3ஆம் தேதி முதல் தவணை செலுத்தியவர்கள் ஜனவரி 31ஆம் தேதி இரண்டாம் தவணை செலுத்த தகுதியானவர்கள்.

எனவே, கோவின் தளத்தில் உள்ள தரவுகளை ஆராய்ந்து இரண்டாம் தவணை செலுத்த வேண்டியவர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் தவணை செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com