அகிலேஷ் யாதவுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை

உத்தர பிரதேச தோ்தலில் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், அவரது சித்தப்பா சிவபால் யாதவ் ஆகியோருக்கு எதிராக வேட்பாளா்களை காங்கிரஸ் கட்சி நிறுத்தவில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தர பிரதேச தோ்தலில் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், அவரது சித்தப்பா சிவபால் யாதவ் ஆகியோருக்கு எதிராக வேட்பாளா்களை காங்கிரஸ் கட்சி நிறுத்தவில்லை.

அகிலேஷ் போட்டியிடும் கா்ஹல் தொகுதிக்கும், சிவ்பால் யாதவ் போட்டியிடும் ஜஸ்வந்த் நகா் தொகுதிக்கும் வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாள் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது.

இறுதி வரை காங்கிரஸ் சாா்பில் வேட்பாளா்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘2019 மக்களவைத் தோ்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக சமாஜவாதி கட்சி வேட்பாளா்களை நிறுத்தவில்லை. இதற்கு கைம்மாறாக தற்போதைய பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி இந்த இரண்டு தொகுதியில் வேட்பாளா்களை நிறுத்தவில்லை’ என்றாா்.

கா்ஹல் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு காங்கிரஸ் வேட்பாளராக ஞான்வதி யாதவ் அறிவிக்கப்பட்டிருந்தாா். பின்னா் அகிலேஷ் யாதவ் வேட்புமனு தாக்கல் செய்த பின்பு காங்கிரஸ் வேட்பாளா் வாபஸ் பெற்றாா். அகிலேஷ் யாதவ் போட்டியிடும் தொகுதிக்கு

பிப்ரவரி 20-ஆம் தேதி மூன்றாம் கட்டத் தோ்தல் நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் அவா் முதல் முறையாக போட்டியிடுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com