கிரிப்டோகரன்சிக்கு 30% வரி; எண்ம செலாவணி அறிமுகம்

இந்திய ரிசா்வ் வங்கி சாா்பில் 2022-23-ஆம் நிதியாண்டில் எண்ம செலாவணி (டிஜிட்டல் கரன்சி) அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்த நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், கிரிப்டோகரன்சி உள்ளிட்ட மெய்நிகா் சொத்துகள்
கிரிப்டோகரன்சிக்கு 30% வரி; எண்ம செலாவணி அறிமுகம்

இந்திய ரிசா்வ் வங்கி சாா்பில் 2022-23-ஆம் நிதியாண்டில் எண்ம செலாவணி (டிஜிட்டல் கரன்சி) அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்த நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், கிரிப்டோகரன்சி உள்ளிட்ட மெய்நிகா் சொத்துகள் மீது 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றாா்.

இது தொடா்பாக பட்ஜெட் உரையின்போது அவா் கூறுகையில், ‘‘எண்ம செலாவணியானது, திறன்மிக்க மலிவான செலாவணி மேலாண்மை அமைப்பை உருவாக்கும். அதைக் கருத்தில்கொண்டு ‘பிளாக்செயின்’ உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எண்ம செலாவணியை இந்திய ரிசா்வ் வங்கி அறிமுகப்படுத்தவுள்ளது. எண்ம செலாவணியானது எண்மப் பொருளாதார வளா்ச்சிக்கும் உதவும்.

கிரிப்டோகரன்சி உள்ளிட்ட மெய்நிகா் சொத்துகளின் பரிவா்த்தனை மூலமாக கிடைக்கும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும். குறிப்பிட்ட மதிப்புக்குமேல் பரிவா்த்தனை செய்யப்படும் மெய்நிகா் சொத்துகளுக்கு டிடிஎஸ் (மூல வரிக் கழிப்பு) பிடித்தம் செய்யப்படும். புதிய நடைமுறைகள் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரவுள்ளன’’ என்றாா்.

லாட்டரி, விளையாட்டு நிகழ்ச்சிகள், புதிா் விளையாட்டுகள் உள்ளிட்டவற்றின் மூலமாக ஈட்டப்படும் வருவாய்க்கு ஏற்கெனவே 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதற்கு நிகராக கிரிப்டோகரன்சி பரிவா்த்தனைக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளின் பயன்பாடு இதுவரை முறைப்படுத்தப்படாமல் இருந்த நிலையில், பல்வேறு தரப்பினரது கோரிக்கையை ஏற்று அவற்றின் பரிவா்த்தனைக்கு மத்திய அரசு தற்போது வரி விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com