கிரிப்டோ கரன்சிகள் சட்டப்பூர்வமாக ஏற்கப்படுமா? நிதித்துறை செயலர் விளக்கம்

ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சியை தவிர பிற கரன்சிகள் சட்டப்பூர்வமாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படாது என மத்திய நிதித்துறை செயலர் டி.வி. சோமநாதன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கிரிப்டோ கரன்சிகள் சட்டப்பூர்வமாக ஏற்கப்படுமா? நிதித்துறை செயலர் விளக்கம்

ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சியை தவிர பிற கரன்சிகள் சட்டப்பூர்வமாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படாது என மத்திய நிதித்துறை செயலர் டி.வி. சோமநாதன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2022 - 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும், ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“ரூபாயை டிஜிட்டல் முறையில் ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ளது. ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாய் சட்டப் பூர்வமாக்கப்படும். இந்த டிஜிட்டல் ரூபாய் என்பது யுபிஐ(கூகுள் பே, போன் பே) அல்லது வேலட் போன்ற தளங்கள் மூலம் டிஜிட்டல் அல்லாத பொருள்கள் வாங்குவது போன்று மட்டுமே வாங்க முடியும்.

ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாய் தவிர, பிட் காயின், இதெரியம் போன்ற கிரிப்டோ கரன்சிகள் கண்டிப்பாக சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படாது.

தனியார் கிரிப்டோக்களில் பணத்தை முதலீடு செய்யும் மக்கள், கிரிப்டோவை அரசு அங்கீகரிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதில் முதலீடு செய்வதன் மூலம் ஏற்படும் இழப்பிற்கு அரசாங்கம் பொறுப்பேற்காது.

மேலும், பிட்காயின், இதெரியம் போன்ற கிரிப்டோக்கள் சட்டவிரோதமானது எனவும் நான் கூறவில்லை. ஆனால், கிரிப்டோக்கள் ஒழுங்குமுறை படுத்தினாலும் சட்டப்பூர்வமானதாக ஏற்கப்படாது.

குதிரைப் பந்தயங்கள் போன்ற சூதாட்டத்திற்கு விதிக்கப்படும் 30 சதவீத வரியே கிரிப்டோ கரன்சிக்கும் விதிக்கப்பட்டுள்ளது. பிட்காயின், இதெரியம் போன்ற கிரிப்டோக்களுக்கு நிலையான மதிப்பு இல்லை. நாளுக்கு நாள் அதன் மதிப்பு மாறிக் கொண்டே இருக்கும். எனவே, கிரிப்டோக்கள் மூலம் பெறும் வருமானத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்படும்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com