வேட்பாளர்கள் சாதி, மதம் குறித்துப் பேசினால், வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்புங்கள்' - பிரியங்கா காந்தி

வேட்பாளர்கள் யாரேனும் சாதி, மதம் குறித்துப் பேசினால் மக்களாகிய நீங்கள் வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்புங்கள் என டேராடூனில் காணொலி பிரசாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

வேட்பாளர்கள் யாரேனும் சாதி, மதம் குறித்துப் பேசினால் மக்களாகிய நீங்கள் வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்புங்கள் என டேராடூனில் காணொலி பிரசாரத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார். 

ஐந்து மாநிலத் தேர்தலில் 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் மாநிலத்திற்கு பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், இன்று டேராடூனில் காணொலி பிரசாரத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி பேசியதாவது: 

'நடப்பு ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஏழை அல்லது நடுத்தர மக்களின் நலனுக்கு எதுவும் இல்லை. 

வைரங்களின் விலை குறைந்துள்ளதாகவும், மருந்துகளின் விலை உயர்ந்துள்ளதாகவும் இன்று காலை யாரோ என்னிடம் சொன்னார்கள். நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன..நீங்கள் எப்போது கண்களைத் திறப்பீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார். 

மேலும், 'தேர்தலின்போது வேட்பாளர்கள் யாரேனும் மதம், சாதி குறித்துப் பேசினால் மக்களாகிய நீங்கள் வளர்ச்சி குறித்து கேளுங்கள். எங்கள் மாநில வளர்ச்சிக்கு என்ன செய்வீர்கள்? என்று கேளுங்கள். 

உத்தரகண்ட் மக்கள் மாற்றத்தைக் காண விரும்பினால் வளர்ச்சிப் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்' என்று கூறினார். 

முன்னதாக உத்தரகண்ட் மாநிலத்திற்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை புதன்கிழமை வெளியிட்ட பிரியங்கா காந்தி, மாநிலத்தில் 4 லட்சம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும் என்றும், அதில் 40 சதவீத அரசு வேலைகள், பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், கரோனாவுக்குப் பின்னர் சுற்றுலாத்துறையை புதுப்பிப்பதில் கட்சி கவனம் செலுத்தும் என்றும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com