தொகுதி மக்களுக்கு கையெழுத்திட்டு உறுதியளித்த ஆம் ஆத்மி வேட்பாளர்கள்

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் தங்கள் தொகுதி மக்களுக்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
உறுதிமொழி ஏற்கும் பாஜக வேட்பாளர்கள்
உறுதிமொழி ஏற்கும் பாஜக வேட்பாளர்கள்

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் தங்கள் தொகுதி மக்களுக்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கவுள்ளன. இதில், கோவாவில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுகிறது.

இந்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அனைவரும் கட்சிக்கு உண்மையாகவும், எம்.எல்.ஏ.வாக தேர்தெடுக்கப்பட்டால் மக்களுக்கு நேர்மையாக பணியாற்றுவோம் என்று பிரமாணப் பத்திரத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளனர்.

எங்களின் அனைத்து வேட்பாளர்களும் நேர்மையானவர்கள்தான். இருப்பினும், வேட்பாளர்கள் நேர்மையானவர்கள் என நிரூபிக்க வாக்காளர்கள் மத்தியில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது அவசியம்.

வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கையெழுத்திட்ட பிரமாணப் பத்திரத்தின் நகலை கொடுப்பார்கள். இதன்மூலம், வேட்பாளர்கள் தவறு செய்யும் பட்சத்தில் பொதுமக்களே புகார் வழங்க உரிமை அளிக்கப்படுகிறது என்றார்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com