‘போராடிய விவசாயிகளை பழிவாங்கும் நோக்கில் பட்ஜெட்’: பகவந்த் மான்

போராடிய விவசாயிகளை பழிவாங்கும் நோக்கில் பட்ஜெட் இருப்பதாக ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் புதன்கிழமை விமர்சனம் செய்துள்ளார்.
ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்
ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்

போராடிய விவசாயிகளை பழிவாங்கும் நோக்கில் பட்ஜெட் இருப்பதாக ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் புதன்கிழமை விமர்சனம் செய்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. பஞ்சாப் தேர்தலை பொருத்தவரை காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், இன்று பகவந்த் மான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி தோல்வி பயத்தில் உள்ளார். அதனால் தான் இரண்டு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். ஒரு தொகுதியில் தோல்வியை தழுவுவார் என உறுதியளிக்கிறேன். இரண்டு தொகுதியிலும் கூட தோல்வி பெற வாய்ப்புள்ளது.

மேலும், பட்ஜெட்டில் ஒன்றுமில்லை. தேசிய ஊரக வேலைத் திட்டத்திற்கான நிதியிலிருந்து ரூ. 20,000 கோடியை குறைத்துள்ளனர். ஏற்கனவே கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் இல்லை. போராடிய விவசாயிகளை பழிவாங்கும் நோக்கில் பிரதமர் மோடி, உரங்களுக்கான மானியத்தை குறைதுள்ளார்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com