
கோப்புப்படம்
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் 2 பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 4 பயங்கரவாதிகள், ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர்.
பஞ்ச்கூர் மற்றும் நோஷ்கி ஆகிய மாவட்டங்களில் தடைசெய்யப்பட்ட பலூச் விடுதலை ராணுவத்தால் புதனன்று தாக்குதல் நடத்தப்பட்டன. பஞ்ச்கூரில் பயங்கரவாதிகள் 2 இடங்களிலிருந்து பாதுகாப்புப் படைகளின் முகாமுக்குள் நுழைய முயன்றர். அதேநேரத்தில் நோஷ்கியில் எல்லைப் படை முகாமுக்குள் நுழைய முயன்றுள்ளனர்.
இந்த இரு தாக்குதல்களும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. இதில் நான்கு பயங்கரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு அதிகாரி காயமடைந்தார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்றுவருகின்றது.