சந்திரயான்-3 ஆகஸ்டில் விண்ணில் ஏவப்படும்: மத்திய அரசு தகவல்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வரும் ஆகஸ்ட் மாதம் சந்திரயான்-3 விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் பேசிய மத்திய பணியாளா், பயிற்சித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங்.
மாநிலங்களவையில் பேசிய மத்திய பணியாளா், பயிற்சித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங்.

புது தில்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வரும் ஆகஸ்ட் மாதம் சந்திரயான்-3 விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “சந்திரயான்-2 இல் இருந்து பெற்ற அனுபவம் மற்றும் தேசிய அளவிலான நிபுணர்கள் அளித்த ஆலோசனைகளின் அடிப்படையில், சந்திரயான்-3 இன் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்புடைய அடிப்படையிலான பணிகள் மற்றும் சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாவும், மேலும் அவற்றின் சிறப்பு சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதும், ஆகஸ்ட் 2022 இல் ஏவப்பட உள்ளது."

மேலும் 2022 இல் (ஜனவரி முதல் டிசம்பர் 22 வரை) திட்டமிடப்பட்டுள்ள பணிகளின் எண்ணிக்கை 19, அதாவது எட்டு ஏவுகணை செலுத்து வாகனங்கள், ஏழு விண்கலப் பயணத் திட்டங்கள் மற்றும் நான்கு தொழில்நுட்ப செயல்விளக்கப் பணிகள் செயல்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் கூறினார்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக நடந்துகொண்டிருக்கும் பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், விண்வெளித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தேவையால் இயக்கப்படும் மாதிரிகள் ஆகியவற்றின் பின்னணியில் திட்டங்களுக்கு மறு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com