மூளையில் ரத்தக்கசிவு: பெண் பணியாளரின் கொடுமைக்குள்ளான 8 மாதக் குழந்தை
மூளையில் ரத்தக்கசிவு: பெண் பணியாளரின் கொடுமைக்குள்ளான 8 மாதக் குழந்தை

மூளையில் ரத்தக்கசிவு: பெண் பணியாளரின் கொடுமைக்குள்ளான 8 மாதக் குழந்தை

குஜராத் மாநிலம் சூரத்தில், 8 மாதக் குழந்தை, தனது பராமரிப்பாளரின் கொடுமைக்குள்ளாகி, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில், 8 மாதக் குழந்தை, தனது பராமரிப்பாளரின் கொடுமைக்குள்ளாகி, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் பராமரிப்பாளர், அந்தக் குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காட்சிகள், குழந்தையின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தததன் அடிப்படையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோமல் தண்டேல்கர் என்ற அந்தப் பெண்ணின் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலைக்குச் செல்லும் தம்பதிகளுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றுதான் அந்த 8 மாத ஆண் குழந்தை. மூளையில் ரத்தக் கசிவுடன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், கோமல் என்ற பெண்ணுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், அந்தப் பெண் 8 மாத ஆண் குழந்தையின் கன்னத்தில் ஒன்றரை நிமிடங்கள் தொடர்ந்து அடிக்கிறார், குழந்தையின் காதுகளைப் பிடித்து திருகுகிறார், படுக்கையில் குழந்தையை தூக்கி வீசுவதும் பதிவாகியுள்ளது. இதனைப் பார்க்கும் போது, குழந்தையைக் கொலை செய்ய முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலைக்குச் செல்லும் தம்பதி, தங்களது குழந்தைகைளை பார்த்துக் கொள்ள குழந்தை பிறந்து 4 மாதங்களுக்குப் பிறகு அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்பெண்ணை, குழந்தைகளைப் பராமரிக்கும் வேலைக்கு நியமித்துள்ளனர்.

இந்த நிலையில், ஒரு சில நாள்களுக்கு முன்பு, அவர்களது அண்டை வீட்டார், குழந்தைகளின் தந்தையிடம், பெண் பராமரிப்பாளரிடம் குழந்தைகள் இருக்கும் போது, அவை தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதாகக் கூறியுள்ளனர்.  இதையடுத்து இரண்டு நாள்களுக்கு முன்புதான் அவர் அப்பணிப்பெண்ணுக்குத் தெரியாமல் வீட்டில் சிசிடிவி கேமராவைப் பொருத்தியுள்ளார்.

இந்த நிலையில், குழந்தை திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக, குழந்தையின் பெற்றோர்களுக்கு தகவல் சென்றுள்ளது. உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த போது, குழந்தையின் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக என்ன நடந்தது என்பதை அறிய சிசிடிவி கேமராவைப் பார்த்த போதுதான், அக்குழந்தையை பராமரிப்பாளர் துன்புறுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில், அப்பெண்ணிடம் விசாரணை செய்ததில், அவர் தான் என்ன செய்கிறோம் என்று அறிந்துதான் செய்துள்ளார். அவருக்கு மன அழுத்தம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை முடிவு வந்ததும், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com