ஐந்தாண்டுகளுக்கு இரண்டு முதல்வர்களா? புதிய வியூகத்திற்கு காங்கிரஸ் பதில் என்ன?

பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக சன்னியை அறிவிப்பதற்கே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில், சித்து தனது சொந்த கட்சியை விமரிசிக்க தொடங்கியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஐந்தாண்டுகளில் தலா இரண்டரை ஆண்டுகள் என இரண்டு பேருக்கு முதல்வர் பொறுப்பை வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அக்கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வா் வேட்பாளா் யார் என்பதை ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை (பிப்.6) அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

காணொலி வழி பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக லூதியானாவுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை வரும்போது இதற்கான அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

முதல்வர் வேட்பாளர் குறித்த விவகாரத்தில் அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, முதல்வர் சன்னி ஆகிய இருவருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் இரண்டு முதல்வர் வேட்பாளர்களை ராகுல் அறிவிப்பார் என தகவல் வெளியானது.

சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில் சன்னியின் உறவினர் பூபேந்திர சிங்கை அமலாக்கத்துறையினர் நேற்று கைது செய்த நிலையில், இரண்டு முதல்வர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படமாட்டார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக சன்னியை அறிவிப்பதற்கே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டதையடுத்து, சித்து தனது சொந்த கட்சியை விமரிசிக்க தொடங்கியுள்ளார். நேர்மையான குற்ற பின்னணி இல்லாத ஒருவரைத்தான் முதல்வராக அறிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சன்னிதான், முதல்வர் வேட்பாளர் என்பதை காங்கிரஸ் பலமுறை சமிக்ஞையின் மூலம் தெரிவித்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com