அப்படி சொல்பவர்கள் முட்டாள்கள்...விளாசிய லாலு பிரசாத்

இம்மாதிரியான செய்திகளை வெளியிடுவோர் முட்டாள்கள் என்றும் என்ன நடந்தாலும் அதை முறையாக தெரிவிப்போம் என்றும் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.
பிகார் முன்னாள் முதல்வர் லாலு
பிகார் முன்னாள் முதல்வர் லாலு

பிகாரில் பிரதான எதிர்க்கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக லாலு இப்போது தீவிர அரசியலில் இல்லை. தில்லியிலேயே தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, அவரின் இளைய மகன் தேஜஸ்வி பிரசாத் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். 

கடந்த 2020 பிகார் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆா்ஜேடி சார்பில் தேஜஸ்வி பிரசாத் முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இப்போது, மாநில எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். எனவே, லாலு கட்சிப் பொறுப்புகளை முழுமையாக தேஜஸ்வியிடம் ஒப்படைக்க இருப்பதாகவும், அவரை கட்சியின் தலைவராக அறிவிக்க இருப்பதாகவும் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதை, லாலுவின் மனைவியும், பிகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி மறுத்திருந்தார். இந்நிலையில், ஆா்ஜேடி கட்சியின் தலைவராக தேஜஸ்வி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என சொல்லுவோர் முட்டாள்கள் என லாலு பிரசாத் விமரிசித்துள்ளார். 

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இதுபோன்ற செய்திகளை வெளியிடுபவர்கள் முட்டாள்கள். என்ன நடந்தாலும் தெரியப்படுத்துவோம்" என்றார். ஆர்ஜேடியின் தலைவராக தேஜஸ்வி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என்ற செய்திக்கு லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப்பும் மறுப்பு தெரிவித்துள்ளார். 

பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பிற மூத்த தலைவர்கள் கலந்துகொள்ளும் ஆர்ஜேடியின் தேசிய செயற்குழு கூட்டம் பிப்ரவரி 10ஆம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ளது. செயற்குழு கூட்டத்தில் லாலு பிரசாத் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com