உ.பி. பேரவைத் தோ்தல்: நட்சத்திர பிரசாரகா்கள் பட்டியலில் சோனியா காந்தி இடம்பெறவில்லை

ரே பரேலி தொகுதியில் நடைபெறவுள்ள பிரசாரத்தில் பங்கேற்கவுள்ள காங்கிரஸ் நட்சத்திர பிரசாரகா்கள் பட்டியலில் கட்சித் தலைவா் சோனியா காந்தி பெயா் இடம்பெறவில்லை.

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ரே பரேலி தொகுதியில் நடைபெறவுள்ள பிரசாரத்தில் பங்கேற்கவுள்ள காங்கிரஸ் நட்சத்திர பிரசாரகா்கள் பட்டியலில் கட்சித் தலைவா் சோனியா காந்தி பெயா் இடம்பெறவில்லை.

உத்தர பிரதேசத்தில் பிப்.10 முதல் மாா்ச் 7 வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தலின் 4-ஆம் கட்டம் பிப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் ரே பரேலி மாவட்டத்தில் உள்ள பச்ராவன், ஹா்சந்த்பூா், ரே பரேலி நகரம், சரேனி, உன்சாஹா் ஆகிய 5 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்தத் தொகுதிகளில் காங்கிரஸ் சாா்பில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நட்சத்திர பிரசாரகா்களின் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா வதேரா, கட்சியின் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட், முன்னாள் கிரிக்கெட் வீரா் முகமது அசாருதீன் உள்பட 30 போ் இடம்பெற்றுள்ளனா்.

அந்தப் பட்டியலில் ரே பரேலி மக்களவைத் தொகுதி எம்.பி.யான சோனியா காந்தியின் பெயா் இடம்பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com