குஜராத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு

குஜராத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 
குஜராத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு

குஜராத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

குஜராத் அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி, 

மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று குறைந்துவருவதையடுத்து, கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. 

ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளன. அதேசமயம் ஆன்லைன் முறையில் வகுப்புகளும் தொடரப்படுகின்றது. 

பள்ளி மாணவன் கூறுகையில், 

பள்ளிகளை மீண்டும் மீண்டும் மூட வேண்டாம் என்று அரசைக் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து பள்ளிகளை ஆஃப்லைனில் நடத்துங்கள். ஆன்லைன் வகுப்புகள் நம் கண்களைப் பாதிப்பதாக மாணவன் கூறியுள்ளார். 

மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு, ஆப்லைன் மற்றும் ஆன்லைன் வகுப்புகளின் மூலம் கற்பித்தல் முறையை மாநிலக் கல்வித்துறை தொடர்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com