உத்தரகண்ட்: குற்றப்பின்னணி கொண்ட 17% வேட்பாளர்கள் 

உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், வழக்கம் போல குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் பட்டியல் நீள்கிறது.
உத்தரகண்ட்: குற்றப்பின்னணி கொண்ட 17% வேட்பாளர்கள் 
உத்தரகண்ட்: குற்றப்பின்னணி கொண்ட 17% வேட்பாளர்கள் 


டேஹ்ராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், வழக்கம் போல குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் பட்டியல் நீள்கிறது.

ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உத்தரக்கண்ட் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பெரிய கட்சிகள் அனைத்துமே, தங்கள் மீது குற்றப் பின்னணி இருக்கிறது என்று தெரிவித்திருக்கும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு 17 முதல் 33 சதவீத வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிகள், தாங்கள் ஏன் இந்த குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளரை தேர்வு செய்தோம், குற்றப் பின்னணி இல்லாத நபர்களை தேர்வு செய்யாதது ஏன் என்று கட்சிகள் வேட்பாளர்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும் என்பதை கட்டாயமாக்கியிருக்கும் நிலையிலும் கூட, பழைய கதையே தொடர்கிறது.

அதாவது, பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 626 வேட்பாளர்களில், 17 சதவீதம் அதாவது 107 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இவர்களில் 61 பேர் மீது மிக மோசமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, 2017ல் நடந்த பேரவைத் தேர்தலில் 637 வேட்பாளர்களில் 14 சதவீதம் பேர்தான், அதாவது 91 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.  

இதனால், மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 13 தொகுதிகள் பதற்றமான தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு தொகுதியில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருப்பின், அந்தத் தொகுதி பதற்றமான தொகுதியாக அறிவிக்கப்படும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com