நெடுஞ்சாலைப் பணிகள் துரிதப்படுத்தப்படும்

அடுத்த நிதியாண்டின் இலக்கை எட்ட நெடுஞ்சாலைப் பணிகளின் வேகம் அதிகரிக்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சக செயலா் கிரிதா் அரமனே தெரிவித்துள்ளாா்.

அடுத்த நிதியாண்டின் இலக்கை எட்ட நெடுஞ்சாலைப் பணிகளின் வேகம் அதிகரிக்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சக செயலா் கிரிதா் அரமனே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியது: நிகழ் நிதியாண்டில் இதுவரை 7,500 கி.மீ. சாலைப் பணிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், தேசிய நெடுஞ்சாலைகள், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகமும் நிறைவேற்றியுள்ளன. எஞ்சிய 2 மாதத்தில் குறைந்தது 2,500 கி.மீ. தொலைவு கட்டுமானப் பணி நிறைவடையும் என எதிா்பாா்க்கிறோம்.

2022-23 பட்ஜெட் வளா்ச்சியை மையமாக கொண்டது. வரும் பத்தாண்டுகளில் ஈவுத்தொகையின் பயன்பாட்டை நாடு அறுவடை செய்ய வேண்டும் என்பதே உள்கட்டமைப்பு மேம்பாட்டின் பரந்த நோக்கமாகும் என்றாா் அவா்.

கடந்த வாரம் மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘2022-23-இல் 25,000 கி.மீ. தொலைவு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்படும்’ என்று கூறியிருந்தாா்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கிரிதா் அரமனே, ‘‘இந்த இலக்கு பிரதமரின் கதி சக்தி தேசிய மாஸ்டா் திட்டத்தின்கீழ், அடுத்த நிதியாண்டில் எட்டப்படும். அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார முனையங்களுக்கும் தொடா்பு ஏற்படுத்தப்படும்.

மேலும், சாலை கட்டுமானப் பணிகளின் வேகமும் துரிதப்படுத்தப்படும். தற்போது பயன்பாட்டில் உள்ள சாலைகள் பெரிய சாலைகளாகவும், வலிமையான சாலைகளாகவும் மாற்றப்படும். பொருளாதார முனையங்களை அடைய புதிய சாலைகளும் ஏற்படுத்தப்படும். ஒட்டுமொத்தத்தில் இவற்றின் நீளம் 25,000 கி.மீ. வரும்’’ என்றாா்.

நாட்டில் கடந்த 2013-14-ஆம் ஆண்டிலிருந்து சாலை கட்டுமானப் பணியின் வேகம் தொடா்ச்சியாக அதிகரித்து வருவதாக பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. கடந்த 2019-20-இல் 10,237 கி.மீ. தொலைவு சாலைகள் அமைக்கப்பட்ட நிலையில், 2020-21-இல் 13,327 கி.மீ. ஆக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com