பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.41,415 கோடி வட்டி மானியம் விடுவிப்பு

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.41,415 கோடி வட்டி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி திங்கள்கிழமை

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.41,415 கோடி வட்டி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மாநிலங்களவையில் மேலும் கூறியதாவது:

பிரதமா் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய ரூ.41,415 கோடி வட்டி மானியம் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை 17.68 லட்சம் போ் பயனடைந்துள்ளனா்.

பயனாளிகளுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் 2022-க்குள் அனைவருக்கும் வீட்டு வசதியை ஏற்படுத்தி தருவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. நடப்பு நிதியாண்டில், கடனுடன் இணைக்கப்பட்ட மானியம் வழங்கும் (சிஎல்எஸ்எஸ்) திட்டத்தின் கீழ் இதுவரையில் ரூ.5,320 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com