நுகர்வோருக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்: கோவாவில் பாஜக வாக்குறுதி

கோவாவில் பிப்.14-இல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. 
நுகர்வோருக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்: கோவாவில் பாஜக வாக்குறுதி

கோவாவில் பிப்.14-இல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் வீட்டுவசதி அமைச்சர் நிதின் கட்கரி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். 

அவர் வெளியிட்ட அறிக்கையில், 

நுகர்வோருக்கு மூன்று இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு உயர்த்தமாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளது. மலிவு விலையில் வீடுகள் கட்டித்தரப்படும். 

கோவாவை சர்வதேச கால்பந்து இடமாக மாற்றுவதாகவும், அதேநேரத்தில் மாநிலத்தின் பொருளாதாரத்தை 50 பில்லியன் டாலர் அதிகரிப்பதாகவும் பாஜக உறுதியளித்துள்ளது. 

தேர்தல் அறிக்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். முந்தைய தேர்தல் அறிக்கைகளில் 80 சதவீதத்தை முடித்துவிட்டோம். அதற்கான அறிக்கையும் வெளியிட்டுவிட்டோம். கோவாவுக்கு வந்து சொந்தமாக வெளிவரும் அரசியல் கட்சிகள் நிறைய இருப்பதால் நான் இதைச் சொல்கிறேன் என்று பனாஜியில் முதல்வர் பிரமோத் சாவந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

பாஜக முதல் முறையாக கடலோர மாநிலத்தில் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com