சூடான் நாட்டின் முன்னாள் இந்திய தூதருக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு அனுமதி

வெளிநாடுகளில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக சூடான் நாட்டுக்கான முன்னாள் இந்தியத் தூதா் தீபக் வோரா, துணைத் செயலா் அஜய் கங்குலி ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்த சிபிஐக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வெளிநாடுகளில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக சூடான் நாட்டுக்கான முன்னாள் இந்தியத் தூதா் தீபக் வோரா, துணைத் செயலா் அஜய் கங்குலி ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்த சிபிஐக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தெற்கு சூடான், ஜூபாவில் உள்ள இந்திய தூதரகத்தில் அக்டோபா் 2007 முதல் மே 6, 2009 வரையில் பணியாற்றிய காலத்தில் தீபக் ஓராநிதி போலி ரசீதுகளை சமா்ப்பித்து அரசாங்க நிதி முறைகேட்டில் ஈடுபட்டதகாவும், இதற்கு ஆஜய் கங்குலியும் துணைப்போனதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை முடித்து வைக்க சிபிஐ தாக்கல் செய்த இரண்டாவது அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதில், தீபக் வோரா, அஜய் கங்குலி ஆகியோா் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்ய போதிய ஆதாரங்கள் உள்ளன என்று சிபிஐ நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

மேலும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் தேவையான அனுமதியைப் பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், தீபக் வோரா, அஜய் கங்குலி ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு மத்திய அரசு திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று தீபக் வோரா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com