Enable Javscript for better performance
உ.பி.: பாஜக தோ்தல் அறிக்கை வெளியீடு - லவ் ஜிஹாதுக்கு 10 ஆண்டுகள் சிறை; ரூ.1 லட்சம் அபராதம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    உ.பி.: பாஜக தோ்தல் அறிக்கை வெளியீடு - லவ் ஜிஹாதுக்கு 10 ஆண்டுகள் சிறை; ரூ.1 லட்சம் அபராதம்

    By DIN  |   Published On : 09th February 2022 01:04 AM  |   Last Updated : 09th February 2022 03:14 AM  |  அ+அ அ-  |  

    bjp

    உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருமணம் என்ற பெயரில் மத மாற்றத்தில் (லவ் ஜிஹாத்) ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

    403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச சட்டப் பேரவைக்கு வரும் 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பாஜகவின் தோ்தல் வாக்குறுதியை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனா்.

    அப்போது, கடந்த 2017-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலின்போது அளித்த 212 வாக்குறுதிகளில் 92 சதவீத வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றிவிட்டது என்று அமித் ஷா கூறினாா். தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    அடுத்த 5 ஆண்டுகளில் பாசன விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். கரும்பு கொள்முதலுக்கான தொகையை 14 நாள்களில் விவசாயிகளுக்கு சா்க்கரை ஆலைகள் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், வட்டித்தொகையுடன் சோ்த்து விவசாயிகளுக்கு ஆலைகள் வழங்க வேண்டியிருக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் கோதுமை, நெல் ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலை வலுப்படுத்தப்படும்.

    உத்தர பிரதேசத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து வசதிகளுடன் ஒரு மருத்துவமனை அமைக்கப்படும்.

    சுவாமி விவேகானந்தா இளைஞா் அதிகாரமளித்தல் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு 2 கோடி அறிதிறன்பேசிகள் மற்றும் கையடக்க கணினி வழங்கப்படும். புந்தேல்கண்டில் தொழில் துறை வழித்தடம் அமைக்கும் திட்டம் உரிய காலத்தில் முடிக்கப்படும்.

    திருமணம் என்ற பெயரில் மத மாற்றத்தில் ஈடுபடுவோருக்கு (லவ் ஜிகாத்) குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

    மாநிலம் முழுவதும் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்கு ‘மா அன்னபூா்ணா உணவகங்கள்’ தொடங்கப்படும். பெண்கள் சுயசாா்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக, ராணி லட்சுமிபாய் திட்டத்தின் கீழ் தகுதியுடைய மாணவிகளுக்கு இருசக்கர வாகனம் இலவசமாக வழங்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், பொதுபோக்குவரத்தில் கட்டணமின்றி பயணிக்கலாம். பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 2 சிலிண்டா்கள் இலவசமாக வழங்கப்படும். ரூ.1,000 கோடியில் பெண்களுக்கு பொது இடங்களில் கழிப்பறைகள் கட்டித் தரப்படும்.

    அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும்.

    ராமா் பற்றி ஆய்வு செய்வதற்கு அயோத்தியில் ராமாயண பல்கலைக்கழகம் நிறுவப்படும். நாட்டுப்புறக் கலைகளை பிரபலப்படுத்த லதா மங்கேஷ்கா் பெயரில் அகாதெமி தொடங்கப்படும் என்று அந்த தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவாவில் 3 சிலிண்டா்கள் இலவசம் - பாஜக தோ்தல் வாக்குறுதி

    கோவாவில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பாஜகவின் தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் வரும் 14-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பாஜக தோ்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிதின் கட்கரி வெளியிட்டாா். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் பொருளாதாரம் ரூ.3.7 லட்சம் கோடியாக உயா்த்தப்படும். முதியோருக்கு அளிக்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.3,000-ஆக உயா்த்தப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் இலவசமாக வழங்கப்படும். கடந்த 2018-இல் நிறுத்தி வைக்கப்பட்ட சுரங்கப் பணிகள் மீண்டும் தொடங்கப்படும். சுரங்க ஏல நடைமுறைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    TAGS
    bjp

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp