
கர்நாடகத்திற்கு ஆதரவாக களமிறங்கும் தெலங்கானா
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து தெலங்கானாவில் உள்ள முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டத்திலுள்ள சைதாபாத் மசூதி வாயிலில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இஸ்லாமிய மாணவிகளுக்கு தடை விதித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
படிக்க | முஸ்லிம் மாணவி தூண்டும் வகையில் பேசியது ஏன்?: கல்வித் துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
கர்நாடகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பு மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏபிவிபி அமைப்பினர் காவித் துண்டு கட்டிக்கொண்டு கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றதால், போராட்டம் கலவரமாகவும் மாறியது. இதனால் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கர்நாடக மாநிலத்தில் பிப்.11 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்லாமிய மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஹிஜாப் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்கையும், கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
படிக்க | இந்தியாவில் உள்நாட்டுப் போர் அபாயம்: மோடியை விமர்சித்த லாலு பிரசாத்
பெண்கள் விருப்பப்படி உடை அணிந்துகொள்ளலாம், மதம் சார்ந்த விவகாரங்களை விமர்சிக்க வேண்டாம் என்று ஹிஜாப் அணிவதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் கர்நாடகத்தில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தெலங்கானாவில் முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.