
மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை முடிவடைந்த நிலையில், மணிப்பூரில் மொத்தம் 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இம்பால் மேற்கு மாவட்டத்தில் பிப்ரவரி 27.இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், மணிப்பூரில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
துணை முதல்வரும், என்.பி.பி தலைவருமான ஸ்ரீ யும்னம்ஜாய்குமார் சிங் கடந்த திங்களன்று 10-உரிபோக் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரி அசிங்வுங்ஷி கம்ராங்கின் அலுவலகத்தில் மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பாஜக வேட்பாளர் குவைரக்பம் ரகுமணி சிங் மற்றும் இந்தியத் தேசிய காங்கிரஸின் நுங்கிலேபம் மகாநந்தா சிங் ஆகியோரும் 10-உரிபோக்கில் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 8-ம் தேதி கடைசி நாளாகும் என்பதால், மொத்தம் 56 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.