பசுபதிநாத் கோயில் நாளை முதல் மீண்டும் திறப்பு

நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயில் (பிப்.11) வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் கோயில் நடை திறக்கப்படுகிறது. 
பசுபதிநாத் கோயில் நாளை முதல் மீண்டும் திறப்பு

நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயில் (பிப்.11) வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் கோயில் நடை திறக்கப்படுகிறது. 

கரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையை அடுத்து நேபாளத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களாக  மூடப்பட்டிருந்தது. 

அந்தவகையில் சிவபெருமானின் புனித ஆலயமான பசுபதிநாத் கோயில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், காத்மாண்டு மாவட்ட நிர்வாக அலுவலகம் வெளியிட்ட உத்தரவின்படி, நாளை முதல் கோயில்கள், மடங்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் போன்ற இடங்களில் வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

கோயிலுக்கு வரும் பக்தர்கள் கரோனா வழிபாட்டு நெறிமுறைகளை பின்பற்றியுமாறும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com