மேகாலயாவில் பிப்.14 முதல் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு

மேகாலயாவில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மேகாலாய முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார். 
மேகாலயாவில் பிப்.14 முதல் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு

மேகாலயாவில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மேகாலாய முதல்வர் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார். 

கரோனா நிலைமையை மதிப்பாய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் முதல்வர் சங்மா தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், 

இரவு 10 முதல் காலை 5 மணி வரை இருந்த இரவு ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் தளர்த்தப்படுகிறது.

பிப்.11 முதல் மாநிலத்திற்கு வரும் 2 தவணை தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை கிடையாது.

திங்கள்கிழமையிலிருந்து ஒன்று முதல் 5 வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் முழுமையாகச் செயல்படும் என்றார். 

6 முதல் 12 வகுப்புக்கு, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்புகள் ஏற்கனவே கடந்த வாரம் முதல் தொடங்கப்பட்டுவிட்டது.

பார்கள், உணவகங்கள் மற்றும் திரையரங்குகளுக்குள் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், ஷில்லாங்கில் ஒற்றைப்படை-இரட்டைப்படை மூலம் வாகனங்கள் இயக்கப்படும் என்றும் சங்மா கூறினார்.

வடகிழக்கு மாநிலத்தில் புதன்கிழமை 125 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. மொத்த பாதிப்பு 92,646 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தொற்றுக்கு 2 பேர் உயிரிழந்த நிலையில், இறப்பு எண்ணிக்கை 1,554 ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com