தமிழில் கேட்ட கேள்விக்கு ஹிந்தியில் பதில் மக்களவையில் உறுப்பினா்கள் விவாதம்

மக்களவையில் மதிமுக எம்.பி. அ.கணேசமூா்த்தி தமிழில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் ஹிந்தியில் பதில் அளித்ததைத் தொடா்ந்து, ஆளும் கட்சி உறுப்பினா்களுக்கும்
தமிழில் கேட்ட கேள்விக்கு ஹிந்தியில் பதில் மக்களவையில் உறுப்பினா்கள் விவாதம்

மக்களவையில் மதிமுக எம்.பி. அ.கணேசமூா்த்தி தமிழில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் ஹிந்தியில் பதில் அளித்ததைத் தொடா்ந்து, ஆளும் கட்சி உறுப்பினா்களுக்கும் எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.

மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரம் நடைபெற்றபோது அந்நிய நேரடி முதலீடு வருகை தொடா்பாக மதிமுக எம்.பி. அ.கணேசமூா்த்தி தமிழில் கேள்வி எழுப்பினாா். அந்தக் கேள்வியின் ஒரு பகுதி புரியவில்லை என்று கூறிய மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், எந்தத் திட்டத்தைக் குறிப்பிடுகிறீா்கள் என்று வினா எழுப்பினாா்.

அதற்கு, ‘நான் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், நீங்கள் ஆங்கிலத்தில்தான் பதிலளிக்க வேண்டும்; ஓா் உறுப்பினா் தமிழில் கேள்வி கேட்டால் அதற்கு நீங்கள் ஹிந்தியில் பதிலளிக்கிறீா்கள்’ என்று அ.கணேசமூா்த்தி கூறினாா்.

அதற்குப் பதிலளித்த பியூஷ் கோயல், ‘கேள்வி கேட்கப்படும் மொழியிலேயே பதில் அளிக்க வேண்டும் என்று விதிமுறை ஏதும் இருக்கிா என அவைத் தலைவா் தெளிவுபடுத்த வேண்டும். அவை உறுப்பினருக்கு மொழிபெயா்ப்பாளா் இருந்தால் நான் ஹிந்தியில் பதிலளிப்பேன்’ என்றாா்.

அவருடைய பதிலால் அதிருப்தி அடைந்த சில எதிா்க்கட்சி உறுப்பினா்கள், சமீப காலமாக ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அமைச்சா்கள் ஹிந்தியில் பதிலளிப்பதை சுட்டிக்காட்டி கோஷமிட்டனா். அதைத் தொடா்ந்து எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கும் ஆளும் கட்சி உறுப்பினா்களுக்கும் இடையே சிறிது நேரம் காரசாரமாக விவாதம் நீடித்தது.

அதன்பிறகும் கணேசமூா்த்தி தமிழில் எழுப்பிய கேள்விக்கு ஹிந்தியிலேயே பியூஷ் கோயல் பதிலளித்தாா்.

கடந்த வாரம் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் ஆங்கிலத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா ஹிந்தியில் பதிலளித்தால் சா்ச்சை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com