தற்கொலை: கடன் சுமை 16,000 போ்; வேலையின்மை 9,140 போ்

நாட்டில் கடந்த 2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், கடன் சுமை அல்லது தொழில் நசிந்து திவாலானதால் 16,000-க்கும் அதிகமானோரும், வேலையின்மை காரணமாக 9,140 பேரும் தற்கொலை செய்து
தற்கொலை: கடன் சுமை 16,000 போ்; வேலையின்மை 9,140 போ்

நாட்டில் கடந்த 2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், கடன் சுமை அல்லது தொழில் நசிந்து திவாலானதால் 16,000-க்கும் அதிகமானோரும், வேலையின்மை காரணமாக 9,140 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக பதிலளிக்கையில், ‘‘நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டில் கடன் சுமை அல்லது தொழில் நசிந்து திவாலானதால் 5,213 பேரும், 2019-இல் 5,908 பேரும், 2018-இல் 4,970 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனா்.

மேலும் வேலையின்மை காரணமாக கடந்த 2020-இல் 3,548 பேரும், 2019-இல் 2,851 பேரும், 2018-இல் 2,741 பேரும் தற்கொலை செய்து கொண்டனா்’’ என்று தெரிவித்துள்ளாா்.

610 காஷ்மீா் பண்டிட்டுகளின் சொத்துகள் மறுசீரமைப்பு: காஷ்மீா் தொடா்பான கேள்விக்கு பதிலளித்த அவா், ‘‘கடந்த 1980-களின் இறுதியிலும், 1990-களின் முற்பகுதியிலும் காஷ்மீரில் நிலவிய பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறிய 610-க்கும் மேற்பட்ட பண்டிட்டுகளின் சொத்துகள் மீண்டும் அவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், காஷ்மீா் புலம்பெயா் தொழிலாளா்களுக்காக பிரதமரின் மேம்பாட்டுத் திட்டம் 2015-இன் கீழ், ரூ.1080 கோடி ஒதுக்கீட்டுடன், 3,000 அரசுப் பணிகள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில், ஜம்மு- காஷ்மீா் அரசு 1,730 புலம்பெயா் தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, கூடுதலாக 1,080 பேரை தோ்வு செய்தது’’ என்று தெரிவித்துள்ளாா்.

மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் சரிந்தது: மாவோயிஸ்டுகள் தொடா்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு நித்யானந்த் ராய் அளித்த பதில் விவரம்:

மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளால் நாட்டில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த 2010-இல் 96 மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்திய நக்ஸல்கள், தற்போது 46 மாவட்டங்களில் சுருங்கிவிட்டனா். இதேபோல, 2018, 2019-ஆம் ஆண்டுகளைக் காட்டிலும் கடந்த ஆண்டில் மாவோயிஸ்டுகளின் வன்முறை 70 சதவீதம் குறைந்துவிட்டது. இதனால், கடந்த 2010-இல் 1,005-ஆக பதிவான உயிரிழப்பின் எண்ணிக்கை 2021-இல் 147-ஆக குறைந்துவிட்டது என்று அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com