ஒற்றை குரலாய் ஓங்கி ஒலித்த அல்லாஹ் அக்பர்...மாணவிக்கு பாராட்டு தெரிவித்த ஒவைசி

கர்நாடகத்தில் அச்சுறுத்தும் வகையில் கோஷம் எழுப்பிய கும்பலுக்கு எதிராக 'அல்லாஹ் அக்பர்' என குரல் எழுப்பிய மாணவியின் பெற்றோருக்கு ஒவைசி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாணவி
கர்நாடக மாணவி

கர்நாடக ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு சென்ற மாணவியை அச்சுறுத்தும் வகையில் அங்கிருந்த கும்பல் கோஷம் எழுப்பியது. அந்த கும்பலை எதிர்க்கும் வகையில் ஒற்றை ஆளாக 'அல்லாஹ் அக்பர்' என அந்த மாணவி கோஷம் எழுப்பினார்.

இந்த விடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் விவாத பொருளாக மாறியது. ஒற்றை மாணவியை அச்சுறுத்தும் வகையில் கோஷம் எழுப்பிய கும்பலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அதே நேரத்தில், கொஞ்சம் கூட அச்சப்படாமல் எதிர் கோஷம் எழுப்பிய மாணவிக்கு பாராட்டும் குவிந்துவருகிறது.

இந்நிலையில், மாணவிக்கு பாராட்டு தெரிவித்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஒவைசி, "மாணவியின் அச்சமற்ற செயல் அனைவருக்கும் தைரியத்தின் ஆதாரமாக மாறியுள்ளது.

முஸ்கான் மற்றும் அவரது குடும்பத்தினரை தொலைப்பேசியில் அழைத்து பேசினேன். மதம் மற்றும் சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் அவர், கல்விக்கான தனது அர்ப்பணிப்பிலும் உறுதியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். அவரது அச்சமற்ற செயல் நமக்கெல்லாம் தைரியத்தை ஊட்டுவதாக இருக்கிறது என தெரிவித்தேன்.

துணிச்சலாக வளர்த்ததற்காக அவரின் பெற்றோரை பாராட்டினேன். தற்செயலாக, 2018 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தள கட்சிக்காக எனது பிரச்சாரத்தின் போது ஒரு விழாவில் அவரது தந்தையை சந்திக்கும் பெருமை எனக்கு கிடைத்தது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com