நீதிபதிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு; பணியமர்த்தம் செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி

உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் நீதிபதி, கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

கடந்த 2014ஆம் ஆண்டு, உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய நீதித்துறை அலுவலரை அதே பதவியில் உச்ச நீதிமன்றம் இன்று பணியமர்த்தியுள்ளது.

தனக்கு பாலியில் தொல்லை அளித்ததாக குவாலியர் மாவட்ட கூடுதல் பெண் நீதிபதி, குடியரசு தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய சட்டத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு, ஜூலை மாதம், கடிதம் எழுதினார். 

தன்னை கவர்ச்சி பாடலுக்கு ஆட சொல்லி உயர் நீதிமன்ற நீதிபதி கட்டாயப்படுத்தியதாகவும் அதுமட்டுமின்றி தொலைதூர பகுதிக்கு பணியிடை மாற்றம் செய்ததாகவும் பெண் நீதிபதி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை மாநிலங்களவையால் தேர்வு செய்யப்பட்ட குழு விசாரித்தது. 

கடந்தாண்டு டிசம்பர் மாதம், உயர் நீதிமன்ற நீதிபதி, எந்த தவறையும் இழைக்கவில்லை எனக் கூறி குழு அறிக்கை தாக்கல் செய்தது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி புகார்தாரருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் மாநிலங்களவை குழு தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com