உபி: காணாமல் போன தலித் இளம்பெண்ணின் உடல் முன்னாள் அமைச்சரின் ஆசிரமத்தில் கண்டெடுப்பு

உத்தரப் பிரதேசத்தில் 2 மாதங்களுக்கு முன் காணாமல் போன இளம்பெண்ணின் உடலை முன்னா
உபி: காணாமல் போன தலித் இளம்பெண்ணின் உடல் முன்னாள் அமைச்சரின் ஆசிரமத்தில் கண்டெடுப்பு

உத்தரப் பிரதேசத்தில் 2 மாதங்களுக்கு முன் காணாமல் போன இளம்பெண்ணின் உடலை முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் காவல்துறையினர் கண்டெடுத்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன் காணாமல் போன தலித் இளம் பெண்ணின் உடலை  சமாஜவாதி கட்சியின் மறைந்த முன்னாள் அமைச்சர் பதஹ் பகதூர் சிங்கின் மகன் ரஜோல் சிங்குக்கு சொந்தமான ஆசிரமத்தில் அழுகிய நிலையில்  காவல்துறையினர் மீட்டனர்.

கடந்த டிச.8 தலித் இளம்பெண் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் ஜன.10 ஆம் தேதி வழக்கில் தொடர்புடைய ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அடுத்தகட்ட விசாரணையில் கடந்த ஜன.24-இல் இளம்பெண் கடத்தலில் முக்கிய குற்றவாளியாக முன்னாள் அமைச்சரின் மகன் ரஜோல் சிங்கும் கைதானார்.

பின், ஜன-25 இறந்த இளம்பெண்ணின் தாயார் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வாகனத்தின் முன் தற்கொலை முயற்சியை மேற்கொண்டார்.

இந்நிலையில், மாயமான இளம்பெண்ணின் அழுகிய உடலை ஜோல் சிங்குக்கு சொந்தமான ஆசிரமத்தில் காவல்துறையினர் கண்டெடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து பெண்ணின் தாயார். ‘ எனது மகளை ராஜோல் சிங், அவரது ஆசிரமத்தில் கொன்று அங்கேயே புதைத்து விட்டார். நான் முன்பு ஆசிரமத்திற்கு சென்றபோது மூன்று மாடிக் கட்டிடத்தைத் தவிர மற்ற வளாகத்தை காட்டினார்கள். உள்ளூர் காவலர் ஒருவரை அழைத்தேன், அவர் அழைப்பை எடுக்கவில்லை. ஒருவேளை அவர் வந்திருந்தால் என் மகள் உயிருடன் இருப்பதைக் கண்டிருப்பேன்’ எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com