நேரு நினைத்திருந்தால் சுதந்திரம் கிடைத்தபோதே கோவாவை விடுவித்திருக்கலாம்: பிரதமர் மோடி

கோவாவை காங்கிரஸ் எதிரிபோல் நினைக்கிறது; அது இப்போதும் தொடர்கிறது என பிரதமர் மோடி விமரிசித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வரும் பிப்ரவரி 14ஆம் தேதி, கோவாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி மப்பூசாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, காங்கிரஸை கடுமையாக விமரிசித்து பேசினார்.

கடந்த 1947ஆம் சுதந்திரம் கிடைத்த சில மணி நேரங்களிலேயே கோவாவை விடுவித்திருக்கலாம்; ஆனால், போர்ச்சுகீசியர்களின் ஆளுகையிலிருந்து கோவைாவை விடுவிக்க 15 ஆண்டுகளானது என மோடி குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "கோவா இளைஞர்களின் அரசியல் கலாசாரம், விருப்பங்களை காங்கிரஸ் ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை. கோவா மீது அவர்களுக்கு எப்போதும் பகை உணர்வு உண்டு. பல வரலாற்று உண்மைகள் மக்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு நான் நாடாளுமன்றத்தில் பேசியபோது, கோவா விடுதலை இயக்கத்தை காங்கிரஸ் எப்படி அழித்தது என்பதை நாட்டுக்கு சொன்னேன். இந்தியா சுதந்திரம் அடைந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு கோவா விடுதலை பெற்றது பலருக்குத் தெரியாது. 

(சுதந்திரத்திற்குப் பிறகு) இந்தியாவுக்கு ராணுவம், பலமான கடற்படை என்ற பலம் இருந்தது. அப்போது, கோவாவுக்கு சில மணி நேரங்களில் விடுதலை பெற்ற தந்திருக்கலாம். ஆனால் காங்கிரஸ் 15 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை. கோவாவின் விடுதலைக்காக மக்கள் போராடிக் கொண்டிருந்தபோதும், சத்தியாக்கிரகிகள் தோட்டாக்களை எதிர்கொண்டபோதும் காங்கிரஸ் அவர்களை கைவிட்டது.

அவர்களை மீட்க காங்கிரஸ் அரசு முன்வரவில்லை. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, செங்கோட்டையில் இருந்து ஆற்றிய உரையில், கோவாவை விடுவிக்க ராணுவத்தை அனுப்ப மாட்டோம் என்று குறிப்பிட்டார். இதன் காரணமாக மக்கள் தங்களை தானே தற்காத்து கொள்ள வேண்டிய சூழலில் தள்ளப்பட்டனர்.

கோவாவை இப்படியா நடத்த வேண்டும்? கோவாவைப் பற்றி காங்கிரஸுக்கு முன்பும் இப்போதும் கூட அப்படியான எண்ணங்கள் இருக்கின்றன" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com