சசி தரூருக்கு ஆங்கிலத்தில் பாடம் எடுத்த மத்திய அமைச்சர்...விளக்கம் கொடுத்து கலாய்த்து அசத்தல்

பட்ஜெட் விவாதம் குறித்து விடியோவை பதிவிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூருக்கு மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஆங்கிலத்தில் பாடம் எடுத்துள்ளார்.
சசி தரூர்
சசி தரூர்

புதிய, பெரிய ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி மக்களையும் அரசியல் தலைவர்களையும் திணறடிப்பவர் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர். அகராதிகளின் உதவி இல்லாமல் இவரின் வாக்கியங்களை படிப்பது சற்று கடினமே. தற்போது, இவரின் எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் கலாய்த்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பட்ஜெட் விவாதம் குறித்து விடியோவை காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான சசி தரூர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்ற மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே திகைத்து பார்ப்பது போல் பதிவாகியிருந்தது.

விடியோவை பதிவிட்ட சசி தரூர், "பட்ஜெட் விவாதத்தின் மீது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக பதில் அளிக்கப்பட்டது. பதிலை நம்ப முடியாமல் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே திகைத்து பார்ப்பது போன்ற முக பாவனையே அனைத்தையும் உணர்த்துகிறது. ஆளும் கட்சியில் இருப்பவர்களால் கூட நிர்மலா சீதாராமனின் பொருளாதாரம் மற்றும் பட்ஜெட் குறித்த கூற்றுகளை நம்ப முடியவில்லை" என பதிவிட்டிருந்தார்.

ஆனால், இதில் ரிப்லை மற்றும் பட்ஜெட் வார்த்தைகளில் எழுத்துப்பிழை இருந்தது. இதை சுட்டிக்காட்டிய அத்வாலே, "அன்புள்ள சசி தரூர் அவர்களே, தேவையற்ற கருத்துகள் மற்றும் கூற்றுகளை கூறும் போது ஒருவர் கட்டாயமாக தவறு செய்வார் என்ற பழமொழி உள்ளது. இது "பைஜெட்" அல்ல, பட்ஜெட். மேலும், ரிலை அல்ல "ரிப்லை"! சரி, நாங்கள் புரிந்துகொள்கிறோம்!" என கிண்டல் செய்தார்.

இதற்கு பதிலளித்த சசி தரூர், "தவறான ஆங்கிலத்தை விட கவனக்குறைவாக தட்டச்சு செய்வது பெரிய பாவம்! நீண்ட காலமாக வெற்றியை சுவைத்து வரும் உங்களின் பயிற்சியால் ஜேஎன்யுவில் ஒருவர் பயன் அடையலாம்" என்றார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சாந்திஸ்ரீ துளிபாடி பண்டிட், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எழுதிய கடிதத்தில் நிறைய வாக்கியப் பிழைகள், இலக்கணம் பிழைகள் இருந்தன. இதை கலாய்க்கும் விதமாக சசி தரூர் பதிலளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com