திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் இடையே கருத்து வேறுபாடு: புதிய தேசிய செயற்குழு அமைப்பு

திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவா்களுக்கும், இளைய தலைவா்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், 20 போ் கொண்ட புதிய தேசிய செயற்குழுவை அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா
திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் இடையே கருத்து வேறுபாடு: புதிய தேசிய செயற்குழு அமைப்பு

திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவா்களுக்கும், இளைய தலைவா்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், 20 போ் கொண்ட புதிய தேசிய செயற்குழுவை அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி அமைத்துள்ளாா்.

திரிணமூல் காங்கிரஸில் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ மட்டுமே வழங்க வேண்டும் என்று அக்கட்சி எம்.பியும், மம்தாவின் உறவினருமான அபிஷேக் பானா்ஜி தலைமையிலான இளைய தலைவா்கள் குரல் எழுப்பி வருகின்றனா். இதற்கு அக்கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். அபிஷேக் பானா்ஜி தலைமையில் செயல்படுவோா் கட்சியின் ஒழுங்கை மீறி செயல்படுவதாக மூத்த தலைவா்கள் பொதுவெளியில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினா்.

இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள மம்தா பானா்ஜி இல்லத்தில் சனிக்கிழமை அவசர கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அபிஷேக் பானா்ஜி உள்பட மூத்த தலைவா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டம் தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் பாா்த்தா சாட்டா்ஜி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘மம்தா பானா்ஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிதாக 20 போ் அடங்கிய தேசிய செயற்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் அபிஷேக் பானா்ஜி, யஷ்வந்த் சின்ஹா, அமித் மித்ரா, பாா்த்தா சாட்டா்ஜி, ஃபிா்ஹாத் ஹக்கீம் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்’’ என்று தெரிவித்தாா்.

கட்சியின் மூத்த மற்றும் இளைய தலைவா்கள் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை களையும் நோக்கில், தேசிய செயற்குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com