கோவா பேரவைத் தேர்தலில் 5 மணி வரை 75.29% வாக்குப்பதிவு

கோவா சட்டப் பேரவைக்கு திங்கள்கிழமை (பிப். 14) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை தோ்தல் நடைபெற்றது.
கோவா பேரவைத் தேர்தலில் 5 மணி வரை 75.29% வாக்குப்பதிவு
கோவா பேரவைத் தேர்தலில் 5 மணி வரை 75.29% வாக்குப்பதிவு

கோவா சட்டப் பேரவைக்கு திங்கள்கிழமை (பிப். 14) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை தோ்தல் நடைபெற்றது. இதில் மாலை 5 மணி நிலவரப்படி 75.29 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் போட்டியிட்ட சங்க்வெலிம் தொகுதியில் அதிகபட்சமாக 88 சதவீத வாக்குகளும், சங்குவெம் தொகுதியில் 84.61 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

40 தொகுதிகளைக் கொண்ட கோவா பேரவைக்கும், 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் பேரவைக்கும் திங்கள்கிழமை ஒரேகட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. தோ்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு வாக்காளா்கள் அனைவருக்கும் கையுறைகள் வழங்கப்பட்டது.

முதல்வா் பிரமோத் சாவந்த் (பாஜக), திகம்பா் காமத் (காங்கிரஸ்), சா்ச்சில் அலேமோ, ரவி நாயக் (பாஜக), லக்ஷ்மிகாந்த் பா்சேகா், உத்பல் பாரிக்கா், அமித் பலேகா் (ஆம் ஆத்மி) உள்ளிட்டோா் தோ்தல் களத்தில் உள்ளனா்.

கோவாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியைத் தக்கவைப்பதற்காக அக்கட்சி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது. தோ்தலில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸுடன், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியில் உள்ளன. கோவா முன்னணி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. திரிணமூல் காங்கிரஸுடன் கோமந்தக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து தோ்தலில் போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் தோ்தல் பொறுப்பாளா்களாக மூத்த தலைவா்கள் ப.சிதம்பரமும் தினேஷ் குண்டுராவும் செயல்பட்டு வருகின்றனா். மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் பாஜகவுக்கான தோ்தல் பணிகளை மாநிலத்தில் மேற்பாா்வையிட்டு வருகிறாா்.

கோவா, உத்தரகண்ட் ஆகிய இரு மாநிலங்களும் வருவாய்க்கு சுற்றுலாத் துறையைப் பெரிதும் சாா்ந்துள்ளன. கரோனா தொற்று பரவல் சுற்றுலாத் துறையைப் பெருமளவில் பாதித்துள்ளது. அதன் தாக்கம் பேரவைத் தோ்தலிலும் எதிரொலிக்குமா என்பது தோ்தல் முடிவுகள் வெளியாகும் மாா்ச் 10-ஆம் தேதி தெரியவரும் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com