உ.பி. இரண்டாம் கட்ட தோ்தல்: 55 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்டமாக 55 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. 
உ.பி. இரண்டாம் கட்ட தோ்தல்: 55 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்டமாக 55 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. 
403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல், பிப்.10-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக, 11 மாவட்டங்களுக்கு உள்பட்ட 58 தொகுதிகளில் கடந்த 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 
இரண்டாம் கட்டமாக 55 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுபெறுகிறது. இந்தத் தோ்தலில் சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவா் ஆஸம்கான், மாநில நிதியமைச்சா் சுரேஷ் கன்னா உள்பட 586 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.  
இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெறவுள்ள 55 தொகுதிகளில் கடந்த 2017-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சமாஜவாதி கட்சி 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com