‘பொய் வாக்குறுதிகளுக்கு மோடி, கேஜரிவால் பேச்சைக் கேளுங்கள்’: பஞ்சாபில் ராகுல் காந்தி

பொய் வாக்குறுதிகளை விரும்பினால் மோடி, கேஜரிவால், பதால் பேச்சைக் கேளுங்கள் என பஞ்சாப் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பொய் வாக்குறுதிகளை விரும்பினால் மோடி, கேஜரிவால், பதால் பேச்சைக் கேளுங்கள் என பஞ்சாப் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளன. தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், பாட்டியாலா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

“நான் பொய் வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன். பொய் வாக்குறுதிகளை நீங்கள் கேட்க விரும்பினால், மோடி, பாதல் மற்றும் கேஜரிவால் பேச்சைக் கேளுங்கள்.

2014-க்கு முன்பு, ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ.15 லட்சத்தைப் போடுவதைப் பற்றி பிரதமர் பேசினார். ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்களுக்கு இரண்டு கோடி வேலைகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இப்போது, அவர் வேலை அல்லது ஊழல் பற்றி பேசாமல், போதைப்பொருள் பற்றி மட்டுமே பாஜக பேசுகிறது.

நான் 2013-இல் பஞ்சாப் வந்தபோது இளைஞர்கள் போதைப்பொருளின் உடனடி அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள் என்று கூறினேன். ஆனால், பஞ்சாபில் போதைப் பொருள் பிரச்னை இல்லை என்று பாஜகவும், அகாலி தளமும் என்னைக் கேலி செய்தார்கள்.

கரோனா புயலுக்கு தயாராகும்படி மத்திய அரசை எச்சரித்தபோது என்னைக் கேளி செய்தார்கள். ஆனால், மொபைல் போன் டார்ச்சை ஏற்றக் கோரி பிரதமர் வலியுறுத்தினார்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com