தஞ்சாவூா் மாணவி தற்கொலை: வழக்குப் பதிவு செய்தது சிபிஐ

தஞ்சாவூா் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் தொடா்பாக சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது.

தஞ்சாவூா் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் தொடா்பாக சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது.

அரியலூா் மாவட்டம், வடுகப்பாளையத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி லாவண்யா, தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் கடந்த ஜன. 9-ஆம் தேதி விஷம் குடித்து, 20-ஆம் தேதி உயிரிழந்தாா். அவரை தற்கொலைக்குத் தூண்டியதாகவும், துன்புறுத்தியதாகவும் விடுதி வாா்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டாா். ஆனால், கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ாலேயே, லாவண்யா தற்கொலை செய்ததாக பாஜக, இந்து இயக்கங்கள் குற்றஞ்சாட்டின.

இதற்கிடையே, லாவண்யாவின் தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 31-ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், உச்சநீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரிக்கத் தடை இல்லை என திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, தமிழக அரசு சென்னை சிபிஐ சிறப்புப் புலனாய்வுப் பிரிவிடம் வழக்கு ஆவணங்களை செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் சிபிஐ சிறப்புப் புலனாய்வுப் பிரிவு புதிதாக ஒரு வழக்கை செவ்வாய்க்கிழமை பதிவு செய்தது. இந்த வழக்கு ஏற்கெனவே திருக்காட்டுப்பள்ளி போலீஸாா் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் குற்றவாளியாக விடுதி வாா்டன் சகாயமேரி மட்டும் சோ்க்கப்பட்டுள்ளாா்.

சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்.ரவி, வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா். இவரது தலைமையிலான சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவினா் புதன்கிழமை முதல் மைக்கேல்பட்டியில் விசாரணையில் ஈடுபடுவா் எனக் கூறப்படுகிறது.

ஆா்ப்பாட்டம்

மாணவி லாவண்யா கட்டாய மதமாற்றத்துக்கு வலியுறுத்தப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக தமிழக அரசைக் கண்டித்து, தில்லி கௌடில்ய மாா்க்கில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லம் அருகே ஆா்எஸ்எஸ் அமைப்பு சாா்ந்த அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com