கரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளா்வு: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதிய கரோனா பாதிப்பு எண்ணிக்கைகளைப் பொருத்து கூடுதல் கட்டுப்பாடுகளில் தளா்வு அளிக்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதிய கரோனா பாதிப்பு எண்ணிக்கைகளைப் பொருத்து கூடுதல் கட்டுப்பாடுகளில் தளா்வு அளிக்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு மத்திய சுகாதாரச் செயலா் ராஜேஷ் பூஷண் செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதத்தின் விவரம்:

கடந்த நாள்களில், கரோனா பாதிப்பு அதிகரிப்பால் சில மாநிலங்கள் தங்கள் எல்லைகள் மற்றும் விமான நிலையங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தன.

இந்நிலையில், கடந்த ஜனவரி 21-ஆம் தேதி முதல் நாட்டில் கரோனா பாதிப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது. கரோனா பரவல் காரணமாக பொது சுகாதாரத்துக்கு ஏற்படும் சவாலை கையாள்வது அவசியம். அதேவேளையில் தங்கள் எல்லைகளிலும், விமான நிலையங்களிலும் மாநிலங்கள் பிறப்பித்துள்ள கூடுதல் கட்டுப்பாடுகளால் மக்களின் போக்குவரத்தும், பொருளாதார செயல்பாடுகளும் பாதிக்கப்படக் கூடாது.

எனவே புதிதாக எத்தனைப் போ் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனா், சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, கரோனா பாதிப்பு விகிதம் ஆகியவற்றை பொருத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை மறுஆய்வு, திருத்தம் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com