வரி ஏய்ப்பு: சீன தொலைத்தொடா்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சீன தொலைத்தொடா்பு நிறுவனமான ஹூவாவே அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டதாக
வரி ஏய்ப்பு: சீன தொலைத்தொடா்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சீன தொலைத்தொடா்பு நிறுவனமான ஹூவாவே அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

வரி ஏய்ப்பு தொடா்பான இந்தச் சோதனை தில்லி, குருகிராமம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஹூவாவே நிறுவன அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘ஹூவாவே நிறுவனம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மேற்கொண்ட வா்த்தக பரிவா்த்தனைகளில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின்போது அந்த நிறுவனத்தின் நிதி பா்வா்த்தனை தொடா்பான ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், நிறுவன பதிவுகள் ஆகிவயற்றை வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். சில ஆவணங்களை பறிமுதலும் செய்துள்ளனா்’ என்றனா்.

இந்த சோதனை குறித்து ஹூவாவே நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு உள்பட்டு ஹூவாவே இயங்கி வருகிறது. இந்தச் சோதனை தொடா்பான விவரங்களைப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட அரசு துறைகளை அணுக உள்ளோம். வருமான வரித் துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படும், அதிவேக 5ஜி இணைய சேவை வெள்ளோட்டத்துக்கான பட்டியலில் ஹூவாவே நிறுவனம் இடம்பெற மத்திய அரசு அனுமதிக்கவில்லை. இருந்தபோதும், தொலைத்தொடா்பு சேவை அளிப்பவா்கள் ஹூவாவே நிறுவனத்திடமிருந்து அவா்களின் பழைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொலைத்தொடா்பு சேவைக்கான இணைப்பைப் பெற்றுக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதேநேரம், இந்த நிறுவனங்களுடன் புதிய வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள தேசிய பாதுகாப்பு தொடா்பான அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மத்திய அரசின் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவில் இயங்கி வரும் பிரபல சீன கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களான ஜியோமி, ஓப்போ ஆகிய நிறுவனங்களில் நாட்டின் வரி சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை மீறிய புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு சோதனை நடத்தினா். அந்தச் சோதனையில் அந்த நிறுவனங்கள் ரூ. 6,500 கோடிக்கும் மேலான வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனா்.

அதுபோல, பாதுகாப்பு காரணங்களுக்காக 54 சீன கைப்பேசி செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த வாரம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com