
சன்னி லியோன்
நாடு முழுவதும் ஆன்லைன் மோசடி பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. எளிய மக்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை ஆன்லைன் மோசயில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியில் நீள்கிறது. இந்த பட்டியலில் சமீபத்தில் சேர்ந்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன்.
இவரின் பான் அட்டையை பயன்படுத்திய நபர் ஒருவர், 2,000 ரூபாய்க்கு கடன் வாங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சன்னி ட்விட்டரில், "இது எனக்கு தான் நடந்தது. சில முட்டாள்கள் எனது பான் எண்ணைப் பயன்படுத்தி 2000 ரூபாய் கடனைப் பெற்றுள்ளார்கள. மேலும் எனது சிபில் ஸ்கோரை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்னையில் எனக்கு நிறுவனம் சார்பில் எந்த உதவியும் அளிக்கப்படவில்லை. இந்தியா புல்ஸ் இதை எப்படி அனுமதிக்கிறது?" என பதிவிட்டிருந்தார்.
(கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய பொருள்களுக்கும் கடன்களுக்கும் சரியான நேரத்தில் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும். அப்படி, திருப்பி செலுத்தவில்லை என்றால் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும். சிபில் ஸ்கோர் என்பது வாங்கிய கடன்களுக்கான தரமதிப் பெண்களாகும். இதன் அடிப்படையில், கடன் அளிக்கக் கூட வங்கி மறுப்பு தெரிவிக்கலாம்)
இதையும் படிக்க | சிங்கப்பூர் தூதருக்கு மத்திய அரசு சம்மன்
சன்னி லியோனின் ட்வீட்டை ரசிகர்கள் பலர் ரீட்வீட் செய்ய, இணையத்தில் வைரலானது. இதையடுத்து, பிரச்னை தீர்த்துவைக்கப்பட்டதாக சன்னி தெரிவித்தார்.
பின்னர், புகார் ட்விட்டை நீக்கிய சன்னி, "சம்பந்த நிறுவனம் இதை விரைவாகச் சரிசெய்ததற்கும் இனி இது நடக்காது என்பதை உறுதிசெய்ததற்கும் நன்றி. எதிர்காலத்தில் இதைத் தவிர்க்கப் பிரச்னைகள் உள்ள அனைவரையும் நீங்கள் கவனித்துக்கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும். மோசமான சிபில் மதிப்பெண்ணை யாரும் சமாளிக்க விரும்ப மாட்டார்கள்" என பதிவிட்டுள்ளார்.