நாட்டில் புதிதாக 22,270 பேருக்குத் தொற்று

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,270 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,28,02,505 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 325 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் புதிதாக 22,270 பேருக்குத் தொற்று

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,270 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,28,02,505 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 325 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று சனிக்கிழமை(பிப்.19) வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் புதிதாக 22,270 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 325 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,11,230 -ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1 சதவிகிதமாக குறைந்துள்ளது.

நேற்று ஒரேநாளில் 60298 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,20,37,536 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98 சதவிகிதமாக உள்ளது. அதே நேரத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 2,53,739 ஆகக் குறைந்துள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 175.03 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினசரி கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து 13 நாள்களாக ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளன.

கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 1.8 சதவிகிதமாகவும், சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.68 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 75,81,27,480 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,35,471பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கடந்த 2020 ஆண்டு ஆகஸ்ட் 7-இல் தொற்று பாதிப்பு 20 லட்சமாகவும், ஆகஸ்ட் 23-இல் 30 லட்சமாகவும், செப்டம்பர் 5-இல் 40 லட்சமாகவும், செப்டம்பர் 16-இல் 50 லட்சமாகவும் அதிகரித்தது. 

செப்டம்பர் 28-இல் 60 லட்சமாகவும், அக்டோபர் 11-இல் 70 லட்சமாகவும், அக்டோபர் 29-இல் 80 லட்சமாகவும், நவம்பர் 20-இல் 90 லட்சமாகவும், டிசம்பர் 19 இல் ஒரு கோடியாகவும் அதிகரித்தது. 

2021 மே 4 ஆம் தேதி தொற்று பாதிப்பு இரண்டு கோடி என்ற கடுமையான மைல்கல்லையும், ஜூன் 23- இல் மூன்று கோடியையும் கடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com