175 கோடியைக் கடந்தது கரோனா தடுப்பூசி

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 175.03 கோடியைக் கடந்துள்ளது.
175 கோடியைக் கடந்தது கரோனா தடுப்பூசி

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 175.03 கோடியைக் கடந்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தகவல்படி, நாடு முழுவதும் சனிக்கிழமை காலை 7 வரையிலான 24 மணி நேரத்தில் 36.28 லட்சத்துக்கும் அதிகமாக (36,28,578) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. அத்துடன் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட மொத்த கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 175.03 கோடியைக் (1,75,03,86,834) கடந்தது.

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 60,298 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 4,20,37,536-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோா் விகிதம் தற்போது 98.21 சதவீதமாக உள்ளது. 22,270 போ் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 2,53,739-ஆக உள்ளது.

வெள்ளிக்கிழமை ஒரு நாளில் 12,35,471 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமாா் 75.81 கோடி கரோனா பரிசோதனைகள் (75,81,27,480) செய்யப்பட்டுள்ளன.

172.04 கோடி தடுப்பூசி விநியோகம்: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 172.04 கோடிக்கும் மேற்பட்ட (1,72,04,92,970) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும், மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 11.17 கோடிக்கும் மேற்பட்ட (11,17,10,731) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com