உ.பி., பஞ்சாப் தேர்தல்: இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் - மோடி வேண்டுகோள்

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் உ.பி.,க்கான மூன்றாம் கட்ட தேர்தலில் இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் என அதிக எண்ணிக்கையிலானவர்கள் வாக்களிக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் வி
கோப்புப்படம்
கோப்புப்படம்


புதுதில்லி: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் உ.பி.,க்கான மூன்றாம் கட்ட தேர்தலில் இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் என அதிக எண்ணிக்கையிலானவர்கள் வாக்களிக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

உத்தரபிரதேசத்தில் மூன்றாம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது. 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 2.15 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இன்று வாக்குப்பதிவு தொடங்கிய முக்கிய தொகுதிகளில், முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் தொகுதியும் அடங்கும். அகிலேஷ் யாதவுக்கு எதிராக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் சத்ய பால் சிங் பாகேலை பாஜக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதைபோன்று, பஞ்சாப் மாநிலத்தில் 23 மாவட்டங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 1304 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில்,2.14 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி, சம்கவுர் சாஹிப் மற்றும் பதவுர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸில் (கிழக்கு) எஸ்ஏடியின் பிக்ரம் சிங் மஜிதியா, ஆம் ஆத்மி கட்சியின் ஜீவன்ஜ்யோத் கவுர் மற்றும் பாஜகவின் ஜக்மோகன் சிங் ராஜு ஆகியோரை எதிர்கொள்கிறார்.

இந்நிலையில்,  பஞ்சாப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், உத்தரப் பிரதேசத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், இரு மாநில மக்களும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.  

இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்க பதிவில், "பஞ்சாப் பேரவைத் தேர்தல் மற்றும் உத்தரப் பிரதேசத்துக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் இன்று நடைபெற்று வருகிறது. இன்று வாக்களிக்க தகுதியுடைய மக்கள் அதிக எண்ணிக்கையில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் என அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பஞ்சாப் மக்களை வாக்களிக்குமாறு பஞ்சாப் மொழியில் ட்வீட் செய்து வலியுறுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்படுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com