பஞ்சாபின் எதிர்காலத்திற்காக அச்சமின்றி வாக்களியுங்கள்: ராகுல் வேண்டுகோள்

பஞ்சாபின் எதிர்காலத்திற்காக அச்சமின்றி வாக்களிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநில மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
பஞ்சாபின் எதிர்காலத்திற்காக அச்சமின்றி வாக்களியுங்கள்: ராகுல் வேண்டுகோள்

புது தில்லி: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பஞ்சாபின் எதிர்காலத்திற்காக அச்சமின்றி வாக்களிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநில மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

பஞ்சாபில் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், வாக்குப்பதிவு உத்தரப்பிரதேசத்தின் 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பஞ்சாபின் எதிர்காலத்திற்காக அச்சமின்றி வாக்களியுங்கள் என்று அம்மாநில வாக்காளர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்க பதிவில், "மக்களை ஆதரிப்பவர்கள், அச்சமின்றி பதில் கூறுபவர்களுக்கு உங்கள் வாக்கை அச்சமின்றி செலுத்துங்கள்" என்று காந்தி ஹிந்தியில் ஒரு ட்வீட்டில் கூறியுள்ளார்.

மேலும், "பஞ்சாபின் நிலையான எதிர்காலத்திற்காக வெளியே வந்து வாக்களியுங்கள்" என்று ராகுல் கூறியுள்ளார்.

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் வளர்ச்சிக்காக வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார், மேலும் புதிய அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் புதிய எதிர்காலம் அமைக்கப்படும் என்றார்.

உத்தரபிரதேசத்தில் மூன்றாம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது. இதில் வாக்களிக்க தகுதியுள்ள 2.15 கோடி வாக்காளர்களுக்கு ராகுல் வெளியிட்டுள்ள வேண்டுகோளில், "அமைதி மற்றும் வளர்ச்சிக்காக வாக்களியுங்கள். புதிய அரசாங்கம் அமைந்தால், புதிய எதிர்காலம் உருவாகும்" என்று ராகுல் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com